டிக்-டாக் செயலியை நீக்கிய கூகுள் நிறுவனம்

டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார்அவர்கள்

By murugan | Published: Apr 17, 2019 11:36 AM

டிக்-டாக் செயலியை தடை விதிக்க கோரி மதுரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். முத்துக் குமார்அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த டிக்-டாக் செயலி அதிகமாக இந்தியாவில் உள்ள இளைஞர்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும்  இந்த செயலியை அதிகமாக  பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிக்-டாக் செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேல் மேற்பட்டவர்கள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம்  டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவு விட்டது.
இந்நிலையில் அந்த வழக்கு ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன், சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.
டிக்-டாக் செயலி  நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். மேலும் நீதிமன்றம்  உத்தரவுக்கு பிறகு  பல லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றம் தடை இருப்பதால் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்க உத்தரவிட வேண்டும் என கூறினார்.
அதற்க்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில் ,இந்த வழக்கு குறித்து மத்திய அரசு மற்றும் டிக்-டாக் செயலி நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் பதில் மனு தாக்கல் அளிக்கவில்லை. எனவே டிக்-டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசு  தகவல் தொழில் நுட்பத்துறை  தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில்  கூகுள் நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலியை  ப்ளேஸ்டோரில் இருந்து  நீக்கி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc