உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது – கனடா பிரதமர்!

உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது – கனடா பிரதமர்!

நெருக்கடியில் உள்ள உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு உலக தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பலர் நேரில் வர முடியாததால் காணொளி காட்சிகள் மூலம் உரையாற்றினார்கள். இந்நிலையில் அவ்வாறு உரையாற்றிய போது பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கிருந்த உலகளாவிய தலைவர்களிடம் பேசுகையில், உலகம் மிக நெருக்கடியில் உள்ளதாகவும் உலகத்தின் பாதுகாப்பு அமைப்பு உடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சர்வதேச நாணய வடிவமைப்பு செய்ய கூடிய உலக வங்கி போன்ற நிறுவனங்கள் இனி நாணயங்கள் வடிவமைப்பதில் உதவாது என தெரிவித்துள்ளார்.

நாடுகள் தங்களுக்குள்ளாகவே ஒன்றோடு ஒன்று பிரிவுடன் காணப்படுகிறது. நாம் நம்முடைய நிலைமையை மாற்றிக் கொள்ளாவிட்டால் மேலும் நிலைமை மோசமாகும். யுத்தம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இன்னும் நேரிடக் கூடும் எனக் கூறியுள்ளார், மேலும் கொரோனா நெருக்கடியில் மனிதாபிமானம் சற்றும் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள காலநிலைக்கு ஏற்றவாறு ஆரோக்கியம் குறித்த ஒரு புதிய யோசனைகளை உலகளாவிய நாடுகள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டும் எனவும், குடி மக்களின் தேவைகள் பல்வேறு இடங்களில் மறுக்கப்படுவதாகவும் அதற்கு சட்டத்தின்படி நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube