முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு..! இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு

By bala | Published: Jul 13, 2020 04:45 PM

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்னாடி ஏலமண்டலா இவர் தனது குடும்பத்தினர் சாலையில் சென்ற பொழுது மாஸ்க் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்துள்ளார், இதனால் மாஸ்க் அணிய ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்தனர் மேலும் இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதை ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினர் அவரை பார்த்தனர் மீண்டும் அவரிடம் வேகமாக சென்று முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் மிகவும் பயங்கரமான கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது வேகமாக சென்று நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். இந்த சண்டை மிகவும் பெரிதாக ஆனதால் ஏலமண்டலாவுடன் வந்த அவரது மகள் பார்த்திமா வை அன்னப்பு ரெட்டி கட்டையால் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தலையில் பலமாக தாக்கியதால் ரத்தம் கொட்டியுள்ளது வேகமாக மருத்துவனையில் பார்த்திமாவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் பார்த்திமா தந்தை போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது 4 நண்பர்களும் கைது செய்தனர்.

Step2: Place in ads Display sections

unicc