நேற்று பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில்  பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பின் ட்சி நிர்வாகிகளிடையே அமித்ஷா பேசுகையில்,303 இடங்களில் வெற்றி பெற்ற போதும், தேர்தல் நடவடிக்கைகளில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு முழு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று பேசினார்.