30 C
Chennai
Thursday, October 21, 2021

#ElectionBreaking:பிற்பகலுக்குள் முழுமையான முடிவுகள் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

இன்று பிற்பகலுக்குள் உள்ளாட்சி தேர்தலின் முழுமையான முடிவுகள் வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதனையடுத்து,நேற்று முதல் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்கிடையில்,ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.இதனால், இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும் பணிகள் இன்று நீடிக்கின்றன.

இந்நிலையில்,ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் 98% நிறைவு பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

Hot Topics

Read More