அலுவலக பீஸா பார்ட்டியில் வெளியேற்றப்பட்ட ரிஸப்ஸனிஸ்டுக்கு 24 லட்சம் வழங்க உத்தரவு

அலுவலக பீஸா பார்ட்டியில் வெளியேற்றப்பட்ட ரிஸப்ஸனிஸ்டுக்கு 24 லட்சம் வழங்க உத்தரவு

கார் கம்பெனியில் வேலை பார்த்த வரவேற்பாலருக்கு 23,000 டாலர் வழங்க அதிரடி உத்தரவு

இங்கிலாந்தில் உள்ள ஒரு ஃபோர்ட் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், அங்குள்ள சக வேலையாட்களால் அவமானப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நியாயமும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது மல்கோர்சாட்டா லெவிகா என்ற பெண் ‘ஹார்ட்வெல்’  ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் வரவேற்பாலராக பணியாற்றி வந்துள்ளார், அங்கு அடிக்கடி பார்ட்டி வைக்கபடுவதால் அதிலிருந்து லெவிகாவை சகபணியாளர்கள்  கலந்து கொள்ள விடாமல் விலக்கிவைத்துள்ளனர், இது குறித்து தான் வேண்டுமென்றே விலக்கிவைக்கப்படுவதாகவும் ,இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர்  2014 ஆம் ஆண்டு முதல் அங்கு பணிபுரிந்து வருவதால், நிறுவனத்தில் பாலியல் பாகுபாடு இருப்பதாகவும் இதன் விளைவாக அவரது ஊதியம் மிகக் குறைவு என்றும் கூறி 2018 மார்ச் மாதம் அவர் புகார் அளித்துள்ளார், இந்த விவகாரத்தில் தீர்ப்பாயம் விசாரித்ததோடு, ஒரு ஊழியர் இதை வேண்டுமென்றே செய்ததாகவும், அவருக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவரின் புகாரை ஜெனிபர் பார்ட்லெட் என்ற நீதிபதி விசாரித்து மிஸ் லெவிகாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இதனுடன் 23,079 டாலர் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube