அசாம் வெள்ளத்தில் மூழ்கிய 21 மாவட்டம்..4.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.!

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 21 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது மேற்பட்ட 4.6 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து பைபர் படகுகள் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவிப்போரை மீட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் 4.6 லட்ச மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 142 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 19,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் பாய்ந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

259 கிராமங்களில் மட்டும் 99,116 பேர் பாதிக்கப்பட்டுள்ள தேமாஜி தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்வநாத் 70 கிராமங்கள், பார்பேட்டா 162 கிராமங்கள், மோரிகான் 90 கிராமங்கள், கோல்பாரா 96 கிராமங்கள், திப்ருகார் 119 மற்றும் டின்சுகியா 136 கிராமங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களுடன் விலங்குகள் மற்றும் விவசாய நிலங்களிலும் பெரும் பாதிப்பில் உள்ளது. இதுவரை 2,49,288 வீட்டு விலங்குகள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டது என தகவல் வெளியானது. இந்த வெள்ளத்தில் இறப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.