குழந்தைகளின் படிப்புக்காக தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் நெகிழ்ச்சி செயல்

குழந்தைகளின் படிப்புக்காக தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் நெகிழ்ச்சி செயல்

  • tv |
  • Edited by Rebekal |
  • 2020-08-04 07:00:29

குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பிக்க வழிவகை செய்துள்ளது.

இதனை கர்நாடக அரசும் பின்பற்றுகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி கூட இல்லாத சில வீடுகளும் இருக்கின்றன என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள கடக் எனும் மாவட்டத்தில் உள்ள ராடார் நாகனூர் எனும் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் தினசரி கூலி செய்து தனது இரு குழந்தைகளையும் பராமரித்து வருபவர். பள்ளியிலிருந்து கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியதை கேட்டு தனது  கழுத்தில் இருந்த தனது தாலியை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று அதில் 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கி உள்ளார் கஸ்தூரி.

இதுகுறித்துக் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பு எனக்கு விருப்பமில்லை. டிவி அத்தியாவசியமான ஒன்று தான், எனவே வேறு வழியில்லாமல் எனது தாலியை விற்று நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி உள்ளேன். எனது கணவருக்கும் தற்பொழுது வேலை இல்லை என அவர் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக தாய் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Latest Posts

Unlock 5: பள்ளிகள் திறப்பது மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.. மத்திய அரசு..!
பெங்களூரில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தமிழக சீர்மிகு காவல்துறையினர்...
நாளை முதல் 8 சிறப்பு ரயில்கள் இயக்கம் - சென்ட்ரல் ரயில்வே அறிவிப்பு.!
Unlock 5: அக். 15 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி!
#BREAKING: வேளாண் மசோதா.. உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்..!
உலக வெப்பமயமாதலுக்கு இந்தியா ஒரு முக்கிய காரணம்.... அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...
மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....