29 C
Chennai
Sunday, April 11, 2021

ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு.!

ஆந்திராவில் பள்ளிகள் நவம்பர் 2ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் பல மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஆந்திர முதல்வர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் ஆகியோருடன் காணொளி காட்சிமூலம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், “அக்டோபர் 5 ஆம் தேதி பள்ளிகளை மீண்டும் திறக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், கொரோனா பரவல் கருத்தில் கொண்டு, நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

 

Latest news

Related news