இந்த ஆண்டின் முதல் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.!

இன்று மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த ராக்கெட்டில் பூமி கண்காணிப்பு பணிக்காக இ.ஓ.எஸ். 01 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.  இந்த செயற்கைக்கோள் மூலம் விவசாயம், பேரிடர் மேலாண்மை காலநிலை, காடுகள்  கண்காணிப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான
9 செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகிறது. கொரோனா காரணமாக  ராக்கெட் ஏவுதலை இந்த முறை பொதுமக்கள் பார்வையிட  அனுமதி கிடையாது.

author avatar
murugan