நம் கழகத்தின் முதல் பெயர்….! அண்ணா நாமம் வாழ்க..! – எடப்பாடி பழனிசாமி

அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து. 

அறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில், திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படும் நிலையில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘நம் கழகத்தின் முதல் பெயர், திராவிட கொள்கைகளை சென்னை மாகாணத்தில் வேரூண்ட வைத்து அதை தமிழ்நாடாக மாற்றிய புரட்சியாளர், சமூக நீதியை மேடை பேச்சிலிருந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் விதைத்த பேரறிஞர் அவர்களின் 113ஆம் பிறந்த நாளில் “ #அண்ணா நாமம் வாழ்க” என்று வணங்கி போற்றுகிறேன்.” என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.