எங்களுக்கு முக்கியமான முதல் எதிரி திமுக தான் – அண்ணாமலை

அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்நது  கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தமிழக பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் தொடுதிரை டிஜிட்டல் டிவியை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி தொடர்நது  கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணியை பொறுத்தவரையில் எங்களுக்கு முக்கியமான, முதல் எதிரி திராவிட  முன்னேற்ற கழகம் தான். நடைபெறவுள்ள 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில், இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது  என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.