#DRDO: முதல் முறையாக செங்கோட்டையில் பாதுகாப்புக்கு பயன்படுத்திய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு.. இதன் அம்சம் என்ன தெரியுமா?

முதல் முறையாக சுதந்திர தின விழா பாதுகாப்புக்கு டி.ஆர்.டி.ஓ இன்று செங்கோட்டையில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நிறுத்தியது.

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் போது செங்கோட்டையில் பாதுகாப்பிற்கு “டிஆர்டிஓ” உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு கருவியை நிறுத்தியது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு அமைப்பில் 3 கிலோமீட்டர் வரை மைக்ரோ ட்ரோன்களைக் கண்டறிந்து ஜாம் செய்யலாம் அல்லது அதன் லேசர் பயன்படுத்தி 1-2.5 கிலோமீட்டர் வரை தாக்க முடியும்.

செங்கோட்டையில் இன்று சமூக தொலைதூரத்திற்கு வழி வகுக்கும் வகையில் 4,000 பாதுகாப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 350 க்கும் மேற்பட்ட டெல்லி காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.