கே.ஜி.எப் 3-க்கு தேதி இல்ல…வருடம் குறித்த படக்குழு.! இதெல்லாம் கொஞ்சம் கூட நியமில்லைங்க…

அனைத்து தரப்பி ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்த ஒரு திரைப்படம் என்றால், கேஜிஎப் திரைப்படம் என்று கூறலாம். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். இதில், கேஜிஎப் 1 கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார். இந்த இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல், மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

படம் 1-ஆம் பாகத்தை விட மிகவும் மாஸ் நிறைந்த ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால், ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். படமும் வசூல் ரீதியாக 1000கோடிக்கு மேல் வசூல் செய்து கேஜிஎப் 3-வது பாகத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.

இதனையடுத்து கேஜிஎப் 3 எப்போது உருவாகும் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில். தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி, அதன்படி கே.ஜி.எஃப். 3 படத்தின முதற்கட்ட பணிகள் இந்த வருடம் இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் படத்தை 2024-ஆம் ஆண்டு வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறி உள்ளார். ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அவெஞ்சர்ஸ் பட வரிசைகளைப் போல் கே.ஜி.எஃப்பையும் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here