Wednesday, November 29, 2023
Homeசினிமாஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார்! அப்டேட்டை தெறிக்க விட்ட KH234 படக்குழு...

ஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார்! அப்டேட்டை தெறிக்க விட்ட KH234 படக்குழு…

நடிகர் கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படங்களின் அப்டேட்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், ‘இந்தியன் 2’படத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியானது.

தற்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 234வது படத்தின் தலைப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, மலையாள நடிகர் துல்கர் சல்மான், நடிகை திரிஷா, நடிகர் ஜெயம்ரவி ஆகியோர் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று காலை கமலின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக நாயகன் படத்திற்காக இணைந்த கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி 37 ஆண்டுகளுக்கு பிறகு, ஒரிஜினல் நாயகன் மீண்டும் வரார் என்கிற போல் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும் என்று தெளிவாக தெரிகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விக்ரம் படத்தில் நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்ததோ அதே போல் இந்த  படத்தில் நடிக்கவுள்ளார்கள்.

கமல் 224

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.