• திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில்  ஒன்றாகும். 
  • இந்நிலையில் திருமலை திருப்பதி கோயிலில் வரும்  16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்க இருக்கிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்யா தேசங்களில்  ஒன்றாகும். ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  திருப்பதி எனும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழ்ந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தளத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார்.  இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த்கோவிலுக்கு பல தேசங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகமாக  வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஏழுமலையானின் தரிசனத்தை பெறுவார்கள். இந்தாண்டு வருகிற 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருமலை திருப்பதி கோயிலில் வரும்  16ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடக்க இருக்கிறது. தெப்ப உற்சவத தினத்தில்  இரவு 7 மணி முதல் 8 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்து  பக்தர்களுக்கு அருள் தருவார்.

 

 

 

முதல் நாள் அன்று சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத ராமர் சுவாமி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்தருவார். அதேபோல் இரண்டாவது நாளில் ருக்மணி சமேத கிருஷ்ணர் தெப்பலில் மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்தருவார்.

இந்நிலையில் கடைசி மூன்று நாட்கள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தர இருக்கிறார்கள். எனவே இதனால் ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.