வரும் 15ஆம் தேதி முதல் திரைஅரங்குகள் திறப்பு… மத்திய அரசு அறிவிப்பு..

வரும், 15 தேதி வியாழன் முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

நாடுமுழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து திரை அரங்கங்களும், கடந்த  மார்ச், 16 முதல், மூடப்பட்டன.தற்போது  வரும், 15 முதல், திரை அரங்குகளை திறப்பதற்கான, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

  • திரையரங்க கேன்டீன்களில், பாக்கெட்கள் மற்றும் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் உணவு மற்றும் பானங்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது.
  • கேன்டீன்களில், ஆன்லைன் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட வேண்டும். அரங்கங்களுக்கு உள்ளே வந்து, உணவு பொருட்கள் வழங்க கூடாது.
  • அரங்கினுள் பார்வையாளர்கள் நுழையும் போது, உடல் வெப்ப நிலை பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
  • கொரோனா அறிகுறிகள் அற்றவர்களை மட்டுமே, அரங்கினுள் அனுமதிக்க வேண்டும்.
  • அரங்கின் பல்வேறு இடங்களிலும், கைகளை சுத்தப்படுத்த, கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.
  • பார்வையாளர்கள் வரிசையில் வர, தரையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • இடைவேளையின் போது, இருக்கையை விட்டு எழுந்து செல்வதை, முடிந்தவரை பார்வையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
  • கழிப்பறை மற்றும் அரங்கின் இதர பகுதிகளில், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • பார்வையாளர்களின் வசதிக்காக, இடைவேளையின் கால அவகாசத்தை, வழக்கத்தை விட அதிகமாக நீட்டிக்க வேண்டும்.
  • ஒவ்வொரு காட்சிக்கு பின்னும், திரை அரங்கு களை, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்
author avatar
Kaliraj