ஒரே இராவில் லட்சாதிபதியாக மாறிய விவசாயி! விவசாயிக்கு அடித்த அதிஷ்டம்!

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ், ரூ.200 குத்தகை எடுத்த நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை கண்டெடுத்து உள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ். இவர் கடந்த மாதம் ரூ.200 க்கு ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் பத்துக்கு பத்து என்ற அளவில் குழிதோண்டி உள்ளார். அதில் இருந்த மண்ணை அகற்றும் முயன்றுள்ளார். அப்போது கற்களும் சேர்ந்து வந்தது. அந்த கல் வித்தியாசமாக  காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகமடைந்த அவர், அரசு அதிகாரியிடம் எடுத்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அது 14.98 கேரட் வைரம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வைரத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஏலம் விட்டுள்ளார். இது 60 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனையடுத்து, இந்த விவசாயிக்கு அடித்த அதிஷ்டதால், ஒரே இரவில் அந்த விவசாயி லட்சாதிபதியாக மாறி உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.