லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! கசிந்த தகவல்.!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! கசிந்த தகவல்.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில் தெலுங்கின் முன்னணி நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் கோலிவுட் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டரை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் ஒன்றை இயக்க போவதாகவும், "தலைவர்169" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் தெலுங்கின் முன்னணி நடிகர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை மைத்ரி மூவீ மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி எஸ்ஆர் பிரபு தயாரிக்கும் ஒரு படத்தினை இவர் இயக்கவுள்ளதாகவும், அதில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Latest Posts

மதுரை மரகதலிங்கம் மாயமான விவகாரம்... சிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்... விசாரனை முடிவில் வெளிவர்ம்...
"அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி யூஜிசி விதிகளுக்கு புறம்பானது!"- ஏஐசிடிஇ
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு - தமிழக முதல்வர் இரங்கல்.!
பாபர் மசூதி இடிப்பு வழக்கு... மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.....
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 5,610 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!
கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 8,830 பேருக்கு கொரோனா.!
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் - மு.க. ஸ்டாலின்
#IPL2020 : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு
#BREAKING: அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி..!
டெல்லியில் இன்று 3,965 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!