சிம்புவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகை.?

சிம்பு நடிக்கவுள்ள நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். 

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இதில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இந்த படத்தினை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை குறித்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன்  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கீர்த்தி சனோன் தில்வாலே, பரேலி கி பர்ஃபி, லூகா சுப்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.