என்டிஆரை யாரென்று தெரியவில்லை என்று கூறிய பிரபல நடிகை.! மிரட்டல் விடும் ரசிகர்கள்.!

மீரா சோப்ரா பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களை யாரென்று தெரியவில்லை

By ragi | Published: Jun 04, 2020 07:37 PM

மீரா சோப்ரா பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களை யாரென்று தெரியவில்லை என்று கூறியதால், நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

2005ல் எஸ். ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா என்ற மீரா சோப்ரா. இந்த படத்திலுள்ள மயிலிறகே மயிலிறகே பாடல் அனைவர் மனதையும் ஈர்க்கும். அதனையடுத்து மருதமலை, காளை, இசை போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களிடம் மீரா சோப்ரா பேசுகையில், ரசிகர் ஒருவர் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர் குறித்து கேட்டுள்ளனர். அப்போது தென்னிந்திய சினிமாயுலகில் மகேஷ் பாபுவை எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், என்டிஆர் யாரென்றே தெரியாது என்றும், நான் அவருடைய ரசிகை அல்ல என்றும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, அவரது கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால் வருத்தமடைந்த மீரா சோப்ரா டுவிட்டரில் என்டிஆர் அவர்களை டேக் செய்து ஒருவரை பிடிக்கவில்லை என்று கூறியதற்காகவா இப்படி தவறாக பேசுகிறார்கள், நீங்கள் இதை எல்லாம் தட்டி கேட்க மாட்டீர்களா என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரது ரசிகர்கள் மீராவை கண்டிப்படி திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc