வெந்தயம் என நினைத்து கஞ்சாவை சமைத்து சாப்பிட்ட முழு குடும்பமும் மயக்கம் அதிர்ச்சி சம்பவம்.!

உத்தரபிரதேசத்தின் கண்ணாஜில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம்  அது

By gowtham | Published: Jul 01, 2020 01:58 PM

உத்தரபிரதேசத்தின் கண்ணாஜில் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பம்  அது மெதி (வெந்தயம்) என்று நினைத்து 'கஞ்சா சப்ஸி' சமைத்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதி.

ஒரு காய்கறி வியாபாரி கஞ்சாவை நித்தேஷ் என்ற நபருக்கு விற்றுள்ளார். இதை அவர் வெந்தயம் என்று கூறி. தனக்கு விற்கப்பட்டதை நிதேஷ் அறியவில்லை இவரும் அவரது வீட்டிற்கு சென்று சாப்பாடு சமைக்க கொடுத்துள்ளார்.

அப்போது மதியம் வெந்தயம் என்று நினைத்து கஞ்சாவை சமைத்து சாப்பிட்ட ஆறு பேர் கொண்ட குடும்பத்தினர் மாலை 5 மணியளவில் குடும்பத்தின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் நபரை மருத்துவரை அழைக்கச் சொன்னார்கள். அக்கம்பக்கத்தினர் மருத்துவரைத் தொடர்பு கொண்டபோது முழு குடும்பமும் மயக்கம் அடைந்தனர். அப்போது அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரை புகார் அளித்தனர் அதன் பின்னர் குடும்பம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியபோது அவர்களுது வீட்டில் சமைத்த 'கஞ்சா சப்ஸி' மற்றும் பாக்கெட்டில் எஞ்சிய சமைக்காத கஞ்சாக்களை ஆகியவற்றைக் போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் பின் காய்கறி விற்பனையாளரை விசாரித்தபோது, ​​அவர் மெத்திக்கு பதிலாக கஞ்சாவை நகைச்சுவையாகக் கொடுத்ததாகக் கூறினார். புகார் அளித்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Step2: Place in ads Display sections

unicc