37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் வேறு நாட்டுக்கு மாற்றம்.. 10 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பா.!

விதிகளை மீறி தகவல் கடத்தியதாக கூறி மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய அரசு. 

ஸ்மார்ட்போன் பயனர்களிடம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் , வாட்ஸாப் , இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய அரசு அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பிய நாட்டின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு சட்டத்தின் படி, ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாட்டின் பேஸ்புக் பயனர்களின் தரவுகளை அமெரிக்காவுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10,767 கோடி ரூபாய் அளவில் அபராதம் விதித்துள்ளது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் படி ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இதுவாகும். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.