ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்;ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு..!

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திற்கு தென்கிழக்கே 110 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில்,ஜப்பானிலும்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.பாகிஸ்தானில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளிவிலான நிலநடுக்கத்தில் சுமார் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,நேற்று ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள வானுட்டு தீவுப்பகுதியில்  இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுகோலில் 4.4 அளிவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் இன்று மாலை 5.09 மணியளவில் ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்திற்கு தென்கிழக்கே 110 கிமீ தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.எனினும்,பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.