கழுதையின் உதவியால் நடக்கும் தேர்தல்

7

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னகரம் பகுதிக்கு அடுத்துள்ளது வட்டுவனக்கல்லி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்கிராமங்களில்  சாலைவசதி எதுவும் இல்லை. இந்த பகுதியில் மூன்று மலைக்கிராமங்கள் உள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று மலை கிராமங்களிலும் 672 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கோட்டூர் மலை, ஏரி மலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதையின் உதவியோடு கொண்டு செல்லப்படுகிறது.