வீட்டிற்கு ரூ.128 கோடிக்கு கரண்ட் பில் வந்ததால் அதிர்ந்து போன முதியவர் !

வீட்டிற்கு ரூ.128 கோடிக்கு கரண்ட் பில் வந்ததால் அதிர்ந்து போன முதியவர் !

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷமிம் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஹப்பூர் சாம்ரி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டுக்கு இந்த மாதம் மின்கட்டணம் ரூ . 128, 45, 95,444 தொகை செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

இவர்களின் வீட்டின் 2 கிலோவாட் மின் இணைப்புக்கு ரூ .128, 45, 95,444 மின் கட்டணமா? என ஷமிம் அதிர்ச்சியடைந்து உள்ளார்.தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என எண்ணி ஷமிம் இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் அந்தத் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திடம் ஷமிம் கூறுகையில், எனது வேண்டுகோளை அதிகாரிகள் காது  யாரும் கேட்க இல்லை. அவ்வளவு பெரிய தொகையை எப்படி கட்ட  முடியும். நான் இது குறித்து புகார் கொடுக்க சென்ற போது மின் கட்டணத்தை கட்டினால் மின்சாரம் வழங்கப்படும்  எனக் கூறி எங்கள் வீட்டு மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர் என கூறினார்.

இதுதொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் கூறுகையில், இது தொழில்நுட்பப் பிழையாக இருக்கலாம்  அவர்கள் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால் கணினியில் சரி பார்த்து புதிய ரசீதை வழங்குவோம். இது போன்ற தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என கூறினார்.

 

author avatar
murugan
Join our channel google news Youtube