Connect with us

காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்! கைது செய்த போலீசார்!

முக்கியச் செய்திகள்

காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்! கைது செய்த போலீசார்!

போக்குவரத்து காவலரின் மீது காரை ஏற்றிய ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

டெல்லி துவாலா கவுன் நகரில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக காவலர் காரை நிறுத்தியுள்ளார். ஆனால் காரை ஒட்டிய ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வழியில் நின்று கொண்டிருந்த போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி வேகமாக சென்றுள்ளார்.

இதனையடுத்து, காரின் முன் பக்கத்தில் சிக்கிக்கொண்ட காவலர், சில மீட்டர் தூரம் தொங்கியவாறு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் ஓட்டுனரை வலது புறமாக இயக்க போலீஸ்காரர் இடதுபுறமாக கீழே விழுந்துள்ளார்.  இதனையடுத்து காவலரின் மீது காரை ஏற்றிய  ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in முக்கியச் செய்திகள்

To Top