மணப்பெண்ணுடன் இணைந்து நடனமாடும் நாய்!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்தவர் சாரா. இவருக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இவர் தனது திருமணத்தை கொண்டாடும் வகையில், தனது செல்ல பிராணியாக நாயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
சாராவின் நடத்திற்கேற்றவாறு, அவரது செல்ல பிராணியாக நாயும், சேர்ந்து நடமாடியுள்ளது. இந்த நாயின் நடனம் பார்ப்போரை வெகுவாகா கவர்ந்த நிலையில், மணப்பெண்ணுடன் இணைந்து அந்த நாய் நடனமாடுவதை அனைவரும் வீடியோ எடுத்தனர்.

இந்நிலையில், சாரா இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், சாராவுக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.