இரண்டு தங்கம் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.! இது கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.!

இரண்டு தங்கம் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.! இது கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.!

  • உத்திர பிரதேசத்தில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருத்து 

இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல சோதனைகள் மேற்கொண்டதில் தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. பின்னர் இவர்களுடன் சேர்ந்து மாநில புவியியல் மற்றும் சுரங்கம் இயக்குநரகம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதன்படி இந்த சுரங்கங்களில் 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் சோன்பாஹ்தி என்ற இடத்தில 2700 டன் தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 650 டன் தங்க படிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில், இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. மேலும் தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இருப்பதாக ஆய்வாளர்களை தகவல் தெரிவிக்கின்றனர். தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்றும், மாநிலத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் இது உதவும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே உலக நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவிடம் 8133.5 டன் தங்கமும், ஜெர்மனியில் 3366 டன் தங்கமும், ரஷ்யாவிடம் 2541.9 டன் தங்கமும், சீனாவிடம் 1948.3 டன் தங்கமும் கையிருப்பு உள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube