கமலஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரத்தின் போது  இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என கூறினார்.கமல்ஹாசனின் இந்த சர்ச்சை பேச்சிற்கு பலர்  கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் பாஜகவைச்சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய  மனுவை தள்ளுபடி செய்தது.