நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்..!

By

டெல்லியில் நாளை மறுநாள் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு,கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்

   
   

கடந்த 3-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 2,600 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 3-ம் தேதி கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா..? என கணக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீரை நவம்பர் 1ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை திறந்து விட கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023