Categories: Uncategorized

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்…!

அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை, மருமகள் முதுகில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கொரோனா உலகையே உலுக்கி வருகின்ற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டாலே பயந்து ஓடக் கூடிய சூழல் தான் தற்போது உள்ளது. அந்த வகையில் பெற்ற தாய் தந்தை என்று கூட பாராமல், குப்பையை போல தூக்கி எறிந்து விட்டு செல்லும் இந்த காலகட்டத்தில், அசாம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை, மருமகள் முதுகில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. நிகாரிகாவின் கணவரும்,  துலேஷ்வரின் மகனுமான சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இவரை, அவரது மருமகளான நிகாரிகா முதுகில் சுமந்து சென்று, ராஹா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனைதொடர்ந்து, மருமகள் நிகாரிகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு தெரிவித்தனர். மேலும் மருமகள் நிகாரிகா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் மருமகள் நிகாரிகாவுக்கு மாமனாரை தனியே விட்டுச் செல்ல மனமில்லை.

டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதாரப் பணியாளர் பின்ட்டு ஹீரா இருவரும், மாமனார் மற்றும் மருமகளுக்கு முதல்கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு, பின் அங்குள்ள கொரோனா சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதித்தனர். நிகாரிகாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…

14 mins ago

அதிரவைத்த பாஜக.! விளம்பர செலவு மட்டும் 3,641 கோடி ரூபாய்.!

BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…

17 mins ago

விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.  கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…

18 mins ago

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

50 mins ago

20 வருடம் கழித்து ‘கில்லி’ படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…

1 hour ago

‘தல’ தோனியின் மாஸ் என்ட்ரி !! வார்னிங் கொடுத்த டி காக் மனைவின் ஸ்மார்ட் வாட்ச் !!

IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…

1 hour ago