தாய்லாந்து பெரும்பான்மை பெற்றிருந்தும் பிரதமர் வேட்பாளராக இருந்த பீதா லிம்ஜரோன்ராத் எம்.பி-யை நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஜெனரல் பிரயுக் சான் ஓ சா பிரதமராக பதவியில் இருந்து வந்தார். இதனை அடுத்து இந்தாண்டு மே 14ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள 500 தொகுதிகளுக்கும் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. பிரதமர் பிரயுத் சான் ஓ-சா தலைமையிலான யூடிஎன் கட்சி 36 இடங்களையும், பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி கட்சி 151 இடங்களையும், முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவாத்ராவின் மகளான பேதோங்தான் ஷினவத்ரா தலைமையிலான ப்வே தாய் கட்சி 141 இடங்களையும், பிற கட்சிகள் 70 இடங்களையும் பெற்றுள்ளது.
இதில் கூட்டணி மூலம் ஆட்சி அமைக்க பிரதான கட்சிகள் முயற்சித்து வரும் வேளையில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், இடைக்கால பிரதமராக பதவி வகிப்பதாக பிரயுக் சான் ஓ சா அறிவித்துள்ளார்.
அதற்குள், அதிக இடங்களை கைப்பற்றிய பீதா லிம்ஜரோன்ராத், தேர்தல் விதிகளை மீறினார் என கூறி அவர் மீது அரசியல் சாசன நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அவர் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் பிரதமர் வேட்பாளர் தேர்தலில் 324 பேரின் ஆதரவை பெற்று இருந்தார். ஆனால் பிரதமராக தகுதி பெற 375 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.