கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் நாடு பலமாக இருக்காது – கே.பி.முனுசாமி

கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் நாடு பலமாக இருக்காது – கே.பி.முனுசாமி

கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும் என்றும் நாடு பலமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது. சென்னை முதல் குமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்.

கொங்குநாடு என்று யார் கொண்டு வந்திருத்தாலும், யார் முன் நிறுத்தியிருந்தாலும், அவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அறிவியல் உலகத்தில் பல்வேறு பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய அனைத்தும் பெற்று வரும்போது, நாடு பலமாக இருக்க வேண்டும், சக்தி படைத்ததாக உருவாக வேண்டும்.

இதன் அடிப்படையில் சிறு சிறு மாநிலங்களாக பிரியும்போது அதன் பலம் குறையும். கொங்குநாடு என கூறுவதை பாஜக தலைமை ஏற்குமா என தெரியவில்லை. ஒரு தனி நபர் தெரிவிக்கும் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக யார் கோள் அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன் செய்லபட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube