#LIVE: தமிழகத்தில் வாக்கு முடிவுகள் இதோ…! சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

4:02:உதயநிதி வெற்றி|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி.50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

3:55-காட்பாடி தொகுதியில்  18-வது சுற்று முடிவில் 971 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை அ.தி.மு.க – 57828 தி.மு.க – 58,799

3:12-மார்கண்டேயன் வெற்றி|விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 73,261 வாக்குகள் பெற்று வெற்றி .அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2:42-நாகை மாலி வெற்றி:நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார்.பாமகவின் வடிவேல் ராவணனை விட 17,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

2:18-ட்விட்டரில் ஸ்டாலின்|வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1:08-முந்தும் செந்தில்பாலாஜி| கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.செந்தில்பாலாஜி 18,294 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 16,215 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

12:29 – திமுக வேட்பாளர் ஐயப்பன் முன்னிலை | கடலூர் தொகுதியில் 9வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சம்பத்தை விட 1284 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஐயப்பன் முன்னிலை.

12:25 – மதிமுக வேட்பாளர் சின்னப்பா முன்னிலை | அரியலூர் சட்டமன்ற தொகுதி நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கையில், மதிமுக வேட்பாளர் சின்னப்பா முன்னிலை 2,300 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

12:22 – திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலை | சென்னை துறைமுகம் தொகுதியில் 5வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சேகர் பாபு 1903 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

12:18 – கவிஞர் வைரமுத்து வாழ்த்து| தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என கவிஞர் வைரமுத்து வாழ்த்து.

12:15 – அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை | 397 வாக்குகள் வித்தியாசத்தில், விழுப்புரம் தொகுதி வேட்பாளர் சி.வி.சண்முகம் முன்னிலை.

12:08 – 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை | தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், துறைமுகம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

12:05 – பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் முன்னிலை | ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் முன்னிலை.

12:02 – விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் முன்னிலை | நாகப்பட்டினம் தொகுதியில் விசிக வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் 15,965 வாக்குகள் பெற்று முன்னிலை.

11:58 – அமைச்சர் சி.வி.சண்முகம் பின்னடைவு | விழுப்புரம் தொகுதி வேட்பாளர் சி.வி.சண்முகம் 4-வது சுற்று முடிவில் 15,558 வாக்குகள் பெற்று பின்னடைவு. திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை.

11:52 – கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்| திமுக தற்போது 137 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு இருப்பதால், வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நிறுத்தம். தொண்டாமுத்தூர் தொகுதியில், நடிகர் மன்சூர் அலி கான் 3வது சுற்று முடிவில் வெறும் 41 வாக்குகள் மட்டுமே பெற்று பின்னடைவு. சென்னை துறைமுகம் தொகுதியில், பாஜக வேட்பாளரை விட 1271 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் சேகர் பாபு முன்னிலை. எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரான முதல்வர் பழனிசாமி 30,129 வாக்குகள் பெற்று முன்னிலை.

li> ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 9371 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் முன்னிலை.

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ் 340 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பின்னடைவு. கொளத்தூர் தொகுதியில் 3 சுற்றுகளின் முடிவில் 5968 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை. விருதாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை.

தேமுதிக வேட்பாளர் பிரேமலதா 2வது இடத்திலும், பாமக 3வது இடத்திலும் உள்ளனர். காரைக்குடியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச்.ராஜா பின்னடைவு. கோவை தெற்கு தொகுதியில் 7,074 வாக்குகள் பெற்று, கமலஹாசன் மீண்டும் முன்னிலை. 10:55 : திமுக முன்னிலை| திமுக 139 இடங்களிலும், அதிமுக 93 இடங்களிலும் முன்னிலை.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை விட 12,636 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை.<

/li> திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியசாமி, பாமக வேட்பாளரை விட 13,304 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 1,639 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தல் உள்ளார்.<

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ.பி.எஸ் பின்னடைவு. திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 124 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

கோவை தெற்கு தொகுதியில், 70 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் முன்னிலை.<

/li> 10:30 AM : திமுக முன்னிலை| திமுக 130 இடங்களிலும், அதிமுக 101 இடங்களிலும் முன்னிலை. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு தொடர்ந்து முன்னிலை. அரவக்குறிச்சியில், பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பின்னடைவு. திமுக வேட்பாளர் பி.ஆர் இளங்கோ முன்னிலை.

காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன், குறிஞ்சிபாடி தொகுதியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பின்னடைவு. உளுந்தூர்பேட்டை தொகுதியில், 4வது சுற்று முடிவில் திமுக முன்னிலை. கொளத்தூர் தொகுதியில் 6,395 வாக்குகள் பெற்று, மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை.

விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு. திருச்செந்தூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரை விட 5477 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை. சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை. அமைச்சர்கள் ஜெயகுமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோருக்கு பின்னடைவு.

கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 70 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை, கமல்ஹாசன், வானதி ஸ்ரீனிவாசனுக்கு பின்னடைவு. திமுக 132 இடங்களிலும், அதிமுக 96 இடங்களிலும் முன்னிலை. காப்பாடி தொகுதியில் துரைமுருகன் பின்னடைவு, அதிமுக வேட்பாளர் வி.ராமு முன்னிலை. மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை. ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை, அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு. மேற்கு வங்கத்தில், ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 110 இடங்களை பெற்று தொடர்ந்து முன்னிலை. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை.

பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு. அசாமில் பாஜக 40 இடங்களில் தொடர்ந்து முன்னிலை. 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், திமுக 65 இடங்களிலும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 7 இடங்களிலும், அசாமில் பாஜக 37 இடங்களிலும், கேரளாவில் சிபிஎம் 72 இடங்களிலும் மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 94 இடங்களிலும், பாஜக 93 இடங்களிலும் முன்னிலை தமிழகத்தில், திமுக 53 இடங்களிலும், அதிமுக 38 இடங்களிலும் முன்னிலை புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் 5 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை.

அசாமில் பாஜக 30 இடங்களிலும், காங்கிரஸ் 19 இடங்களிலும் முன்னிலை. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 6, பாஜக 3 இடங்களிலும் முன்னிலை. கேரளாவில் இடதுசாரி கூட்டணி 7, காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை. கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் புதிய அலுவலராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தமிழகம் கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும், தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் தலா ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் மின்னணு வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

murugan

Recent Posts

‘ஐ ஆம் நாட் கிழவன் ..சீனியர் யூத்’ ..! 103 வயது சிஎஸ்கே ரசிகரின் வைரலாகும் வீடியோ !!

CSK Fan : 103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது.…

56 mins ago

வெறும் ரூ.9,999 விலையில்…அம்சமான அம்சங்களுடன் ரியல்மி C65 அறிமுகம்.!

Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி  C65…

2 hours ago

யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…

2 hours ago

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

5 hours ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

5 hours ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

5 hours ago