தொடங்கியது அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் !அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா,சுஷில் சந்திரா ஆகியோர் அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.மேலும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா,சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலிப் ஷர்மா,திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று தமிழகம் வந்தடைந்தனர்.

இந்நிலையில் சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

இன்று தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா,சுஷில் சந்திரா ஆகியோர் அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.அதிமுக,திமுக,தேமுதிக,காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டங்களில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment