#Breaking:சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

#Breaking:சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றதை அடுத்து,தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புத்தாண்டின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து,கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரையின் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்களின் பதில்கள் இடம் பெற்றன.

இதனையடுத்து,நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின.அதன்படி,கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் கூட்டுறவு சங்க திருத்த மசோதா மற்றும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள்,சட்டப்பூர்வமான வாரியங்கள்,மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்கள் அனைத்தும் இனி டிஎன்பிஎஸ்சி மட்டுமே மேற்கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.

 

Join our channel google news Youtube