29 C
Chennai
Monday, July 26, 2021

சமுதாய தடுப்பூசியான முகக்கவசத்தை மக்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர்


8
/ 100


சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மீண்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின் தான் உடலில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பலர் தடுப்பூசி போட்ட பின்பு முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest news

Related news