மெகா ஹிட் படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தளபதி.! எந்த படம் தெரியுமா.?

மெகா ஹிட் படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தளபதி.! எந்த படம் தெரியுமா.?

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் அவரது தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் "நாட்டாமை". இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தில் சரத்குமாரின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த ராஜா ரவீந்தருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தளபதி விஜய் தானாம். ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். ஏனெனில் அந்த படத்தில் ராஜாவிற்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார். அப்போது சங்கவி மற்றும் விஜய் குறித்து வந்த கிசுகிசுக்கள் காரணமாக தான் விஜய் அவர்கள் நாட்டாமை படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிய நாட்டாமையாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!
70 ஆண்டுகளாக பாகிஸ்தானின் ஒரே ஒரு பெருமை பயங்கரவாதம் தான் - இந்தியா பதிலடி
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படவில்லை- தோனி..!
மனைவி குடும்பத்தினரால் கௌரவ கொலை செய்யப்பட்ட கணவர்!
கர்நாடக சட்டமன்றத்தில் மூன்று மணி நேரத்தில் நில திருத்த மசோதா உள்ளிட்ட  9 மசோதாக்கள் நிறைவேற்றம்
எஸ்.பி.பி யின் உடல் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.!
உலகளாவிய அமைப்பே நொறுங்கிவிட்டது - கனடா பிரதமர்!