துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல – கஸ்தூரி ட்வீட்

துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல என்று நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டது.அந்த படத்தில் திருவள்ளுவர் விபூதி மற்றும் காவி உடை அணிந்து இருப்பது போன்று இருந்தது.இதற்கு விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவியின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல.
இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.