#Breaking:கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் – ஆட்சியர் உத்தரவு..!

கோவை மாவட்டத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கடந்த 5 நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது.

  • பிரசித்தி பெற்ற 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை.
  • அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
  • அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.மேலும்,உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை அனுமதி.
  • மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி.ஆனால்,மார்க்கெட்களில் சில்லறை விற்பனைக்கு தடை.
  • உணவகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
  • கிராஸ்கட் சாலை,100 அடி சாலையில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை கிழமைகளில் இயங்க தடை.
  • கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு.
  • கேரளாவிலிருந்து வருபவர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.