மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு நிதி வேண்டும்….பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை…!!

10

நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக நேரடியாக கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணியை தொடங்க இருப்பதாக  கூறப்படுகிறது.இதில் முதல் பகுதியாக 50 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பணியை உருவாக்கிட ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் 20 ஆயிரத்து 196 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு முதல் கட்ட பணிகளை போல் மத்திய அரசு 50 சதவீத நிதி பங்கினை வழங்கிட வேண்டும் என்றும் திட்டப்பணிகளை தொடங்க துரிதமாக அனுமதி வழங்கிட வேண்டுமென்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கோரிக்கை மனு அளித்துள்ளார்.