28.4 C
Chennai
Monday, November 30, 2020

இடஒதுக்கீடு தராவிட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது.இதனிடையே  இன்று ,மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது” என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. “பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துபூர்வமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க. அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க. அரசும் – அ.தி.மு.க. அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.

எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல் – சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் – மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் – இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Latest news

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா”.! 5 மொழிகளில் டிச.,5 வெளியீடு.!

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் "பிரம்மாஸ்த்ரா" திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்...

#BREAKING: நாளை புரெவி புயலாக வலுப்பெறும்- வானிலை ஆய்வு மையம்..!

செய்தியாளர்களிம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், 975 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை காலை புயலாக வலுப்பெற்று...

நிவர் புயலால் பாதிக்கப்பட்டபகுதியில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி சதுப்பு நிலக்காடுகளை ஆய்வு செய்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி. வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது,புதுச்சேரி அருகே கரையை கடந்தது.இதனால் விளைவாக சென்னை,கடலூர் ,செங்கல்பட்டு என வட கடலோர மாவட்டங்களில்...

சிம்பு அணிந்த வாட்ச் என்ன தெரியுமா? விலை மற்றும் முழு விவரம் இதோ!

நடிகர் சிம்பு, தற்பொழுது மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். புதுச்சேரியில் நிகழும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், இணையத்தில் வைரலாக,...

Related news