ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்.!

கந்தம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டியில் பகுதியில் அதிமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், இதனால் விபத்து அதிகமாக நடப்பதாலும் புதிய மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து  தமிழக முதல்வர் உயர்மட்ட மேம்பாலத்திற்காக ரூ. 33 கோடி பணம் ஒதுக்கீடு செய்தார்.

இந்நிலையில்,  இந்த மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி அனைத்து பணிகளும் முடிவு பெற்ற நிலையில், தற்போது மேம்பாலம் விரைவாக முடிவடைந்ததால் , இன்று கந்தம்பட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்  பழனிசாமி ஓசூர் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.