#Breaking:மீண்டும் மிரட்டல்;டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக,பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேர ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி,இன்று அந்தமான் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் 24 மணி நேரத்தில் ஜவாத் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா- ஒடிஷா அருகே 4 ஆம் தேதி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,டிச.4 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக,மதுரை,விருதுநகர்,நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் & அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், 5ம் தேதி வரை மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recent Posts

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…

2 mins ago

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…

3 mins ago

மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

5 mins ago

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

15 mins ago

தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…

27 mins ago

சாம்பியனின் மனநிலையில் விளையாடுகிறோம் ..! போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் கூறியது இதுதான் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றடெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசி இருந்தார். நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் நேற்று…

35 mins ago