#Breaking:கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது- உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா நிவாரணம் வழங்கும் இடங்களில் ஆளுங்கட்சி சின்னம் இடம் பெறக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில்,”கடந்த ஜனவரி மாதம் முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.2500 ரூபாய் வழங்கிய போது,அதற்கான டோக்கன்களை அரசியல் கட்சியினர் வழங்கக் கூடாது எனவும்,நியாய விலைக் கடைகளில் கட்சி சார்பில் பதாகை வைக்க கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை,மீறும் வகையில் தற்போது கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரத்தில் திமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.

எனவே,நியாய விலைக் கடைகள் அருகில் ஆளும் கட்சியினர் விளம்பர பலகை வைக்க தடை விதித்து தமிழக அரசுக்கு,உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”,எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து,இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது,அப்போது,நிவாரான உதவி வழங்கப்படும் ரேஷன் கடைகளில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளதாகவும், முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்,தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதாவது,”தேர்தல் அறிவிக்கப்பட இருந்த சமயத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டதால்,அதில் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது எனவும்,பேனர்கள் வைக்க கூடாது எனவும் முன்னதாக வழக்கு தொடரப்பட்டது.ஆனால்,அப்போதைய நிலையும்,தற்போதைய நிலையும் வெவ்வேறாக உள்ளது”,என்று வாதிட்டார்.

இதனைத்தொடர்ந்து,நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”நிவாரண உதவி வழங்கும் போது,அரசை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை முன்னிலைப்படுத்தக் கூடாது.

மேலும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் படம் ரேஷன் கடைகளில் இடம் பெறுவது தவறில்லை.ஆனால்,அதில் ஆளுங்கட்சியின் சின்னத்தைதான் பயன்படுத்த கூடாது.

அதுமட்டுமல்லாமல்,நிவாரணம் வழங்கும் நிகழ்வை,அரசியல் நிகழ்ச்சியாக மாற்ற கூடாது.மேலும்,நிவாரண உதவிகள் வழங்கும் போது கொரோனா தடுப்பு விதிகளை கண்டிபாக பின்பற்ற வேண்டும்”,என்று உத்தரவிட்டனர்.

Recent Posts

இதுக்கு தான் ஹர்திக் வேணும்! குஜராத் படுதோல்வியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!!

ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…

24 mins ago

T20 உலகக்கோப்பை அணியில் இவர்களுக்கு வாய்ப்பா? ஆலோசனையில் நடந்தது என்ன?

t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…

33 mins ago

பூத் சிலிப் வரவில்லையா.? வாக்குச்சாவடியை கண்டறிய எளிய வழி இதோ…

Election2024 :  இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…

34 mins ago

மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!

Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

36 mins ago

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்தது…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

46 mins ago

தத்தளிக்கும் துபாய்…2வது நாளாக சென்னை டூ எமிரேட்ஸ் விமான சேவை ரத்து.!

Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…

58 mins ago