சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப  திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.  விண்வெளியில் சொந்தமாக ஆய்வு மையம் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 2  விண்கலம் திட்டமிட்டபடி அடுத்த மாதம் 15 ந்தேதி  விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.