vijay meet Students

தொடங்கியது விழா…மாணவ, மாணவிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு.!!

By

இன்று நடிகர் விஜய் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

இதற்கான விழா சென்னை, நீலாங்கரையில்  உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தற்போது நடிகர் விஜய் தற்போது கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை சந்தித்துள்ளார்.  விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர் அளித்த பரிசை பெற்றுக்கொண்ட விஜய் அவரை கட்டியணைத்து வாழ்த்து கூறினார். தற்போது விழாவில் நடிகர் விஜய் பேசி வருகிறார்.

Dinasuvadu Media @2023