மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், முட்டுக்கட்டை போடக்கூடாது- ராமதாஸ்

மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும், முட்டுக்கட்டை போடக்கூடாது- ராமதாஸ்

அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ உயர்சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 2016-ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டு முறையில் இந்தக் கல்வியாண்டிலேயே இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்று  மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணை பிறப்பித்துள்ளதாக  உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு  தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே உயர்சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்; முட்டுக்கட்டை போடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube