மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது.! திமுக எம்பி கனிமொழி பேச்சு.!

மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது. என மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி பேசினார். 

கடந்த வாரம் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் ஆரம்பித்த உடனடியே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதானி குழும விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் 3 நாட்களாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து, இன்று 4வது நாளாக இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பகல் 12 மணிவரையில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு நிகழ்வை தொடர்ந்து மீண்டும் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் பேசினர். அப்போது திமுக எம்பி கனிமொழி மக்களவையில் பேசினார்.

அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன . ஆனாலும், இதுவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கமல் இருக்கிறார். தற்போதைய நிலைமையில் ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.  மேலும், மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. என்றும், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது என்றும் மாநிலங்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment